சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய முன்னேற்றம்: ட்ரம்ப்

சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த டொனால்ட் ட்ரம்ப், தற்போது வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாகவும் கூடிய விரைவில் நல்ல வர்த்தக ஒப்பந்தம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
 | 

சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் பெரிய முன்னேற்றம்: ட்ரம்ப்

சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டு வந்த டொனால்ட் ட்ரம்ப், தற்போது வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் நல்ல வர்த்தக ஒப்பந்தம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் அவர், "தற்போதுதான் சீன அதிபர் ஜி-யுடன் தொலைபேசியில் நீண்ட நேர பேச்சுவார்த்தை முடிந்தது. வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை மிக சிறப்பாக நடந்து வருகிறது. இது பேசி முடிக்கப்படும் போது, எல்லா பகுதிகளையும், எல்லா பிரச்னைகளையும் தீர்த்து வைக்கும். பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என எழுதினார். ஆனால், பேச்சுவார்த்தை குறித்த எந்த விவரங்களையும் ட்ரம்ப் குறிப்பிடவில்லை.

முன்னதாக, சீன பொருட்களின் மீது கூடுதல் வரிகளை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டதை தொடர்ந்து, அமெரிக்க பொருட்கள் மீது சீனா பதிலுக்கு வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் மூண்டது. தொடர்ந்து அதிகப்படியான பொருட்கள் மீது இரு நாடுகளும் வரிகளை விதித்து வந்த நிலையில், ஜி20 மாநாட்டில் இரு தலைவர்களும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவுக்கு வந்தனர். 90 நாட்களுக்கு வரிகளை நிறுத்திவைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த இடைவேளையில் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை பேசி முடிக்க முடிவு செய்யப்பட்டது. 90 நாட்களில் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், மீண்டும் முன்னர் விதிக்கப்பட்ட வரிகள் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தெற்கு எல்லையில் சுவர் கட்ட நிதி கோரி வரும் அதிபர் ட்ரம்ப், கடந்த ஒரு வாரமாக அமெரிக்க அரசு துறைகளுக்கான பட்ஜெட்டை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டு, அரசை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP