டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆரம்பித்தது கெட்ட காலம்!

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையை கையிலெடுத்துள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல முனைகளில் இருந்து நாடாளுமன்ற கமிட்டி விசாரணைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆரம்பித்தது கெட்ட காலம்!

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, அமெரிக்க நாடாளுமன்ற கீழ் சபையை கையிலெடுத்துள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல முனைகளில் இருந்து நாடாளுமன்ற கமிட்டி விசாரணைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனது 'எல்லையில் சுவர்' கட்டும் திட்டத்திற்கு நிதி கிடைக்காத காரணத்தினால் அமெரிக்க அரசின் பட்ஜெட்டை நிறைவேற்றவிடாமல் தடுத்து வைத்துள்ளார். அவரது கட்சிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுவரை பெரும்பான்மை இருந்து வந்த நிலையிலேயே, அவரது திட்டத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், எதிர்க்கட்சி பெரும் வெற்றி பெற்று, கீழ் சபையில் பெரும்பான்மையை கையிலெடுத்தது. தேர்தலின் முடிவுக்கு, ட்ரம்ப் அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியே காரணம் என கூறப்படுகிறது. 

ட்ரம்ப்புக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு விவகாரங்களில் நாடாளுமன்ற கமிட்டி விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சியின் தரப்பில் இருந்து கோரப்பட்டு வந்தது. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு சபையிலும் ட்ரம்ப் கட்சி பெரும்பான்மை வகித்து வந்ததால், அவரது கட்சி எம்.பி.க்கள், ட்ரம்ப்பை எதிர்க்க, தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சி தற்போது நாடாளுமன்ற கீழ் சபையை கையிலெடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் நாட்களில், ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பலமுனைகளில் இருந்து நாடாளுமன்ற கமிட்டி விசாரணைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது வரி கணக்கை மக்களுக்கு காட்டாதது, அதிபராக இருந்துகொண்டே லாபகரமான தொழில் முடிவுகள் எடுத்தது; தன்னுடைய மகள், மருமகன் ஆகியோரை அரசு பணிகளில் ஈடுபடுத்தி வந்தது; ரஷ்யாவுடனான ரகசிய தொடர்பு; அரசு அனுபவமில்லாத பெரும்பணக்கார தொழிலதிபர்களை தனது அமைச்சரவையில் நியமித்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP