ஏலத்துக்கு வந்த கார்ல் மார்க்ஸின் கையெழுத்து: ஒரே பக்கப் பிரதி ரூ.3.58 கோடி

பொருளாதார மேதையும், கம்யூனிசத்தின் தந்தை என்றும் போற்றப்படும் கார்ல் மார்க்ஸின் ஒரே ஒரு கையெழுத்துப் பிரதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஏலத்தில் ரூ.3.58 கோடிக்கு விற்பனையானது.
 | 

ஏலத்துக்கு வந்த கார்ல் மார்க்ஸின் கையெழுத்து: ஒரே பக்கப் பிரதி ரூ.3

ஏலத்துக்கு வந்த கார்ல் மார்க்ஸின் கையெழுத்து: ஒரே பக்கப் பிரதி ரூ.3பொருளாதார மேதையும், கம்யூனிசத்தின் தந்தை என்றும் போற்றப்படும் கார்ல் மார்க்ஸின் ஒரே ஒரு கையெழுத்து இடம்பெற்ற ஒரு பக்கத்தின் பிரதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்த ஏலத்தில் ரூ.3.58 கோடிக்கு விற்பனையானது.

கார்ல் மார்க்ஸின் கையால் எழுதப்பட்ட டாஸ் கேப்பிடல் என்ற நூலின் ஒற்றைப் பக்கம், அடிப்படை விலையைக் காட்டிலும், 10 மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்பட்டு விற்பனையானது. அதில் மார்க்ஸின் கையெழுத்து இடம்பெற்றிருப்பதே ஏலத் தொகைக்கான சிறப்பு.

பெய்ஜிங் நகரைச் சேர்ந்த பெங் லன் எனும் வர்த்தகரிடம் கார்ல் மார்க்ஸின் இந்த கையெழுத்துப் பிரதி இருந்தது.

கடந்த 1850 செப்டம்பர் முதல் 1853ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை லண்டனில் மூலதனம் குறித்து கார்ல் மார்க்ஸ் 1,250 பக்கங்களுக்கு மேல் எழுதினார். அதில் நூலின் ஒருபக்கம்தான் சமீபத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் குறித்து அறிந்து கொள்ள உலகின் தலைசிறந்த நூலாக இன்றளவும் டாஸ் கேப்பிட்டல் விளங்குகிறது.

கார்ல் மார்க்ஸின் 200வது பிறந்ததினம் இந்த மாதம் வந்ததையொட்டி இந்த ஏலம் நடத்தப்பட்டது. இதே ஏலத்தில், கார்ல் மார்க்ஸின் நண்பரும் பொருளாதார அறிஞருமான பிரட்ரிக் ஏங்கெல்ஸ் கையால் எழுதிய கம்யூனிஸ்ட் மேனிபெஸ்ட்டோ என்ற நூலின் ஒரு பக்கம் ஏலம்விடப்பட்டது. இது ரூ.1.78 கோடிக்கு ஏலம் போனது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP