அமெரிக்காவில் 'இ-மெயில்' சிவா அய்யாத்துரை மீது நிறவெறி தாக்குதல் 

அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிட உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 'இ-மெயில்' சிவா அய்யாத்துரை மீது நிறவெறித தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 | 

அமெரிக்காவில் 'இ-மெயில்' சிவா அய்யாத்துரை மீது நிறவெறி தாக்குதல் 

அமெரிக்க செனட் தேர்தலில் போட்டியிட உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 'இ-மெயில்' சிவா அய்யாத்துரை மீது நிறவெறித தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செனட் தேர்தலில் எதிர்ப்போட்டியாளரின் ஆதரவாளரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் செனட் உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் 'இ-மெயில்' சிவா அய்யாத்துரை ஆளும் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என கூறப்பட்டது. இந்த நிலையில் அய்யாத்துரை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவித்தார். இவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் தற்போதைய செனட் உறுப்பினருமான எலிசபெத் வாரென் தேர்தலில் நிற்கிறார். இதற்கான பிரசார வேலை அங்கு தீவிரமாக நடந்து வருகிறது. 

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமான டவுன் ஹால் என்றப் பகுதியில், சிவா அய்யாத்துரை கையடக்க ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு நடந்து சென்றுகொண்டிருந்த எலிசபெத் வாரென்னின் ஆதாரவாளர், சிவா அய்யாத்துரையிடம் கடும் வாக்குவாதம் செய்தார். அவரை இனவாத மற்றும் நிறவெறியை பிரதிபலிக்கும் சொற்களைக் கூறி திட்டி, ஒலிபெருக்கியை கையால் தள்ளினார். இதனால், ஒலிபெருக்கி சிவா அய்யாத்துரையின் முகத்தில் இடித்து அவருக்கு பலமான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து வாரென்னின் அந்த ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். இது குறித்த விவரத்தையும் தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவையும் சிவா அய்யாத்துரை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

தமிழகத்தில் சிவகாசியைச் சேர்ந்த சிவா அய்யத்துரை தனது 7 வயதில் அமெரிக்கா சென்றார். அங்கு சைட்டோசல்வ் என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய அவர் தற்போது அமெரிக்காவில் முன்னனி தொழில் முனைவராகவும் உள்ளார். இ-மெயில் அனுப்பும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தனக்கு அங்கீகாரம் மறுக்கப்படுவதற்கு இனப் பாகுபாடே காரணம் என அவர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP