அமொிக்கா- 100 வயதிலும் யோகாவில் அசத்தும் இந்திய வம்சாவளி மூதாட்டி

இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக நடனமாடியும் வருகிறார்.
 | 

அமொிக்கா- 100 வயதிலும் யோகாவில் அசத்தும் இந்திய வம்சாவளி மூதாட்டி

இந்தியாவின் மிக உயரிய பத்மஸ்ரீ விருது பெற்ற அமெரிக்க பெண்மணி, தனது 100வது வயதிலும் சிறந்த யோகா பயிற்சியாளராகவும், நான்கு இடுப்பு அறுவை சிகிச்சைகளுக்கு பின்னரும் உற்சாகமாக நடனமாடியும் வருகிறார்.

புதுச்சோியின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் கூர்மையாக கவனித்து வந்தார்.

இதன்காரணமாக , இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த பற்று ஏற்பட்டது. அந்த பற்றின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார். 

இந்தியாவின் பழம்பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசானத்தை பயிற்றுவிப்பதற்காக நியூயார்க் நகரில் வெஸ்ட்செஸ்டர் யோகாசன பயிற்சி மையம் என்ற பள்ளியை தொடங்கினார்.

ஆனால், அந்த இளம் வயதிலேயே யோகாவில் கடினமான ஆசனங்களை செய்து காட்டி, ஆண்களால் செய்ய முடியும் என்றால், என்னாலும் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
டாவோ, யோகாவில் மிக முக்கியமான பயிற்சியான மூச்சு பயிற்சி குறித்து அனைவருக்கும் கூறி வருகிறார். நியூயார்க்கில் இப்போது தனியாக வசிக்கும் 100 வயதுடைய  டாவோவுக்கு தோழர்கள் வட்டாரம் மற்றும் அவரிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஆதரவாக இருக்கின்றனர். 

இவர் இந்த ஆண்டிற்கான சிறந்த சாதனையாளராக தேர்வு செய்யப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியிடம் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP