கல்லூரியில் வைத்து பெற்றோரை சுட்டுக் கொன்ற அமெரிக்க மாணவன்

நேற்று அமெரிக்காவின் மிஷிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பெற்றோரை கொன்றுவிட்டு கல்லூரி மாணவர் ஒருவர் தப்பித்தார்.
 | 

தேர்வு முடியும் நாள் என்பதால், விடுமுறையை நோக்கி மிஷிகன் பல்கலைக்கழக மாணவர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், திடீரென விடுதி வளாகத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் துப்பாக்கியுடன் மாணவர் பல்கலைக்கழகத்தினுள் இருப்பதாக கூறப்பட்டது. அதனால், கல்லூரியை மூடி, மாணவர்கள் அவரவர் வகுப்புகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இறந்த இருவரும் ஒரு மாணவனின் பெற்றோர்கள் என தற்போது தெரிய வந்துள்ளது. போலீஸ் அதிகாரியான தனது தந்தையின் துப்பாக்கியை அவரிடம் இருந்து பிடுங்கி, அவரையும் தாயையும் எரிக் டேவிஸ் ஜூனியர் என்ற மாணவன் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் நடக்கும் இரண்டாவது பெரிய துப்பாக்கி சம்பவம் இதுவாகும். முன்னதாக ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP