சொந்த மகன் மற்றும் மகளையே திருமணம் செய்த அமெரிக்க தாய்

ஒக்லஹோமாவில், தன் சொந்த மகன் மற்றும் மகளையே திருமணம் செய்து கொண்ட தாய்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

சொந்த மகன் மற்றும் மகளையே திருமணம் செய்த அமெரிக்க தாய்

சொந்த மகன் மற்றும் மகளையே திருமணம் செய்த அமெரிக்க தாய்அமெரிக்காவில், தன் சொந்த மகன் மற்றும் மகளையே திருமணம் செய்து கொண்ட தாய்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் ஒக்லஹோமாவைச் சேர்ந்தவர் 45 வயதுடைய பட்ரீஷியா அன் ஸ்பான். இவருக்கு மிஸ்டி டான் ஸ்பான் என்ற மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர் தன்னுடைய மகளுடன் 2014ம் ஆண்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தநிலையில், 2016ம் ஆண்டு ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமானது என்று அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தன்னுடைய சொந்த மகளையே பட்ரீஷியா திருமணம் செய்துகொண்டார். 

இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்காவில் நெருங்கிய உறவு முறைக்குள் திருமணம் செய்வது சட்டப்படி தவறானது ஆகும். அதன் அடிப்படையில், பட்ரீஷியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளிவந்தது. இவர் தன்னுடைய மகனை 2008ம் ஆண்டில் ரகசியமாகத் திருமணம் செய்தது வெளியானது. அப்போது அவருடைய மகனுக்கு 18 வயது கூடப் பூர்த்தியாகவில்லை. 

இந்தநிலையில், வழக்கு விசாரணை நீண்டுகொண்டே சென்றது. கடைசியாக பட்ரீஷியா தன்னுடைய மகளை திருமணம் செய்துகொண்டதை ஒப்புக்கொண்டார். இதனால், பட்ரீஷியாவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 ஆண்டுகள் நன்னடத்தைக் காலமும் அவர் அனுபவிக்க வேண்டும். மேலும் தண்டனையில் இருந்து வெளிவரும் போது தாம் ஒரு பாலியல் குற்றவாளி என்பதையும் அவர் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP