ரஷ்யாவில் உளவு பார்த்ததாக அமெரிக்கர் கைது!

அமெரிக்கா ரஷ்யா இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை தொடர்ந்து, ரஷ்யாவில் உளவு பார்த்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை ரஷ்ய உள்நாட்டு பாதுகாப்புத்துறை கைது செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
 | 

ரஷ்யாவில் உளவு பார்த்ததாக அமெரிக்கர் கைது!

ரஷ்யாவில் உளவு பார்த்ததாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை ரஷ்ய உள்நாட்டு பாதுகாப்புத்துறை கைது செய்து அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

ரஷ்யாவில் உளவு பார்த்ததாக, அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை, எஃப்.எஸ்.பி எனப்படும் ரஷ்ய உள்நாட்டு பாதுகாப்புத்துறை கடந்த 28ம் தேதி கைது செய்தது. கைது செய்யப்பட்டவர் பெயர் பால் வீலன் என ரஷ்யா தெரிவித்துள்ளது. அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவரது கைது குறித்து தங்களிடம் ரஷ்ய வெளியுறவுத் துறை தகவல் தெரிவித்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. ஆனால், கைது செய்யப்பட்டவரின் பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களும் கூற அமெரிக்க வெளியுறவுத்துறை மறுத்துவிட்டது.

கைது செய்யப்பட்டவரை தூதரக அதிகாரிகள் மூலம் அணுக அமெரிக்கா கோரியுள்ளது. ரஷ்ய சட்டத்தின்படி, உளவு பார்ப்பதற்கு 10 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தேர்தலில் ஹேக்கர்கள் மூலம் குறுக்கிட்டது கூட்டு சதி செய்தது தொடர்பாக, ரஷ்யாவை சேர்ந்த பலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது அமெரிக்கர் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP