அடேங்கப்பா... 18 மைல் நீள மீன்வலை கொண்ட படகு சிறைபிடிப்பு!

அண்டார்டிகா கண்டத்தின் அருகே, சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அந்த படகு 18 மைல் நீளம் கொண்ட வலையை வைத்து மீன்பிடித்து வந்தது தெரிய வந்துள்ளது.
 | 

அடேங்கப்பா... 18 மைல் நீள மீன்வலை கொண்ட படகு சிறைபிடிப்பு!

அடேங்கப்பா... 18 மைல் நீள மீன்வலை கொண்ட படகு சிறைபிடிப்பு!

அண்டார்டிகா கண்டத்தின் அருகே, சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு சிறைபிடிக்கப்பட்டுள்ளது. அந்த படகு 18 மைல் நீளம் கொண்ட வலையை வைத்து மீன்பிடித்து வந்தது தெரிய வந்துள்ளது. 

கில்நெட்டிங் எனப்படும் மீன்பிடி முறை, அண்டார்டிகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதையும் சல்லடையாக அரித்தெடுக்கும் இந்த முறை, கடல்வாழ் உயிரினங்களை பெருமளவு அழிந்து வந்ததால், அந்த பகுதியில் சர்வதேச நாடுகள் இதை தடை செய்துள்ளன. 

இந்நிலையில், இதுபோன்ற நூற்றுக்கணக்கான கில்நெட்டிங் வகை வலைகளை ஒன்றாக இணைத்து, மீன் பிடித்து வந்த படகை, இந்தோனேசிய அதிகாரிகள் சிறை பிடித்துள்ளனர். அந்த படகு பயன்படுத்திய வலை சுமார் 18 மைல்களுக்கு (29கிமீ) நீண்டு இருந்ததாம். 

STS-50 என்ற அந்த படகை ஏற்கனவே சீன அதிகாரிகள் சிறை பிடித்து வைத்திருந்த நிலையில், அங்கிருந்து அது தப்பித்தது. 8 நாடுகளின் கடற்படையினரிடம் இருந்து அந்தந்த நாடுகளின் கொடிகளை பயன்படுத்தி அந்த படகுக்குழு தப்பி வந்தார்களாம். சமீபத்தில் STS-50 குறித்த விவரங்களை இந்தோனேசிய அதிகாரிகளுக்கு இன்டெர்போல் தெரிவித்திருந்ததாம். அதை வைத்து, அவர்கள் வெற்றிகரமாக படகை கைப்பற்றினர். 

54 மீட்டர் நீளம் கொண்ட அந்த படகு, சுமார் 30 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்டதாம். படகினுள் இருந்த இந்தோனேசியா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த 20 பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக கடலிலேயே இருப்பதாகவும், சரியான சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள், கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

கடந்த சில வருடங்களில் இந்தோனேசிய கடல்வளத்தை பாதுகாக்க, சட்டவிரோதமான நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மீன்பிடி படகுகளை அந்நாட்டு அரசு சிறைபிடித்து அழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP