Logo

சிரியாவில் கூடுதல் படைகள்: அமெரிக்க அரசு உத்தரவு

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெற இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், வீரர்களுக்கு உதவ கூடுதல் படைகளை அனுப்ப உள்ளதாக, அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
 | 

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வந்த அமெரிக்க படைகளை, அந்நாட்டின் அதிபர் ட்ர்மப் பின்வாங்க உள்ளதாக தெரிவித்தார். இனிமேலும் வெளிநாட்டு போர்களுக்கு உதவ அமெரிக்க படைகளை அனுப்புவதாக இல்லையென கூறினார். இதற்கு அமெரிக்க பாதுகாப்புத்துறையிலேயே கடும் அதிருப்தி நிலவியது. 

இதைத் தொடர்ந்து, சமீபத்தில் சிரியாவின் மன்பிஜ் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 4 அமெரிக்கர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். அதில் இரண்டு பேர் அமெரிக்க பாதுகாப்பு படையை சேர்ந்தவர்களும் அடங்குவர். இதை தொடர்ந்து ராணுவத்தை சிரியாவில் இருந்து திரும்பப்பெறும் நடவடிக்கைகளுக்கு உதவ, கூடுதல் படைகளை அனுப்ப உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2000 முதல் 2500 பேர் கொண்ட அமெரிக்க படைகள் சிரியாவில் இருந்து வந்த நிலையில், படைகளை முழுவதும் திரும்பப்பெறுவதற்கு முன், அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP