அமெரிக்காவுக்குள் நுழையும் கட்டுக்கடங்காத அகதிகள் கூட்டம்

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நகரங்களுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் குடியேற்றத்துக்காக ஊர்வலமாக புறப்பட்டுள்ளனர். ட்ரம்ப்பின் எச்சரித்தும் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அங்கு நுழைய முற்பட்டுள்ளது.
 | 

அமெரிக்காவுக்குள் நுழையும் கட்டுக்கடங்காத அகதிகள் கூட்டம்

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நகரங்களுக்குள் ஆயிரக்கணக்கான அகதிகள் குடியேற்றத்துக்காக ஊர்வலமாக புறப்பட்டுள்ளனர். ட்ரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்தும் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் அங்கு நுழைய முற்பட்டுள்ளது. 

அமெரிக்கா - மெக்சிக்கோ எல்லை இடையே பதற்றமான சூழலில் மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக குடியேற 10,000த்துக்கும் மேலானோர் ஊர்வலமாக நுழைய 4500 கி.மீ நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்களில் பெரும்பாலானவரை மெக்சிகோ, கெளதாமாலா இடையே உள்ள எல்லை பாலம் மெக்சிகோ அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இவர்கள் தங்களது நாட்டிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக படகுகள் மூலம் தப்பித்தனர்.
 
இதனிடையே இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள். வறுமை, வன்முறை காரணமாக, தங்களது நாட்டிலிருந்து தப்பிக்க அமெரிக்காவிற்குள் செல்ல முயல்வதாக அவர்கள் கூறுகிறார்கள். 'எல்லோரும் கடவுளுடைய குழந்தைகள்' , 'அனைவரையும் நேசியுங்கள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் ஏந்தி செல்கின்றனர். 

ட்ரம்ப் எச்சரிக்கை! 

இந்தப் பேரணியில் இருந்து யாரும் அமெரிக்காவுக்குள் நுழையக் கூடாது என அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மீறினால் ராணுவத்தைக் கொண்டு தடுக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே பேரணியில் அவ்வப்போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதாகவும் இதனால் அங்கு பதற்றமான சூழல் இருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இதற்கு அமெரிக்கா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளை மீது மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP