அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற சிறுவன்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் அங்குள்ள சிறுவன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
 | 

அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற சிறுவன்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் இந்தியர் ஒருவர் அங்குள்ள சிறுவன் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மேடாக் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் எட்லா. இவர் நியூஜெர்ஸி மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி தேதி அன்று அவருக்கு இரவுப்பணி என்பதால், அன்று இரவு பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார்.

அவர் செல்லும் வழியில், அமெரிக்க சிறுவன் ஒருவர் எதிரே வந்து துப்பாக்கியால் சுட்டான் இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக அந்த இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மரணமடைந்த சுனில் தனது தாயின் 95வயது பிறந்தநாளை கொண்டாட இந்திய வர இருந்ததாக கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP