விபத்துக்குள்ளான தனது சொந்த கால்களை சமைத்து விருத்தளித்த விநோத அமெரிக்கர் 

விபத்தில் சிக்கிய ஒருவர் துண்டிக்கப்பட்ட தனது காலை பத்திரப்படுத்தி தனது நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த சம்பவம் நியூயார்க்கில் நடந்துள்ளது.
 | 

விபத்துக்குள்ளான தனது சொந்த கால்களை சமைத்து விருத்தளித்த விநோத அமெரிக்கர் 

விபத்தில் சிக்கிய ஒருவர் துண்டிக்கப்பட்ட தனது காலை பத்திரப்படுத்தி தனது நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த சம்பவம் நியூயார்க்கில் நடந்துள்ளது.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசிப்பவர் ட்ரூவ் பேரிமோர். இவர், தனது நண்பர்களுக்கு வித்தியாசமான முறையில் விருந்தளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

கடந்த 2016-ஆம் ஆண்டு விபத்தில் சிக்கிக் கொண்டதில், அவரது காலின் ஒரு பகுதி சேதமடைந்தது. அவர் கால் எலும்புகள் உடைந்து விட்டதால் இனி நடக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

அதனால் தனது கால்களை நீக்கும் படி அவர் கூறினார். இதையடுத்து, அவரின் காலின் ஒரு பகுதி நீக்கப்பட்டது. மருத்துவர்களின் அனுமதியுடன் அவர் தனது காலை பதப்படுத்தி வைத்திருந்தார். பின்னர் தனது நண்பர்களை அழைத்து அவர்களுக்கு தனது காலை சமைத்து விருந்தாக அளித்துள்ளார். தானும் அந்த உணவை உண்டதாக அவர் இது குறித்து பகிர்ந்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில், இதனை பதிவு செய்திருந்த அந்த நபரின் பதிவு தற்போது வைரலாகி உள்ளது. 

இவ்வாறு விநோதமாக நடந்துகொண்டது குறித்து கேட்டதற்கு, ஒரு முறை அவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்கள் மனித மாமிசத்தை ருசித்துப் பார்க்க வேண்டும் என்றும், ஆனால் சுகாதாரமான முறையிலும் மனித குலத்துக்கு எதிரானதாகவும் அது இருக்குமே என்று கிண்டலாக பேசிக் கொண்டதை நினைவு கூர்ந்துள்ளார். எனவே தனது கால் தனக்கே பயன்படாது என்று ஆன நிலையில், நண்பர்களின் ஆசையை பூர்த்தி செய்ய இவ்வாறு சமைத்து விருந்தளித்ததாக கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP