80 நடிகைகளிடம் அத்துமீறிய தயாரிப்பாளரின் விவகாரம் படமாகிறது

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் வன்புணர்வு புகார்கள் குவிந்து ஹாலிவுட்டையே பரபரக்கச் செய்த விவகாரம் திகில் திரைப்படமாகப் போகிறதாம்.
 | 

80 நடிகைகளிடம் அத்துமீறிய தயாரிப்பாளரின் விவகாரம் படமாகிறது

ஆஸ்கார் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் வன்புணர்வு புகார்கள் குவிந்து ஹாலிவுட்டையே பரபரக்கச் செய்த விவகாரம் திகில் திரைப்படமாகப் போகிறதாம். 

ஹார்வி வெயின்ஸ்டீன் பாலியல் தொல்லையை மையமாக வைத்து திகில் படம் ஹாலிவுட்டில் தயாராகிறது. இந்த படத்தை பிரையன் தே பால்மா இயக்க உள்ளார். இவர் மிஷன் இம்பாசிபிள், த அன்டச்சப்பள்ஸ், மிஷன் டு மார்ஸ் உள்பட பல படங்களை இயக்கியவர் ஆவார். இது குறித்து அவர் கூறும்போது, "ஹார்வி வெயின்ஸ்டீன் கதைகளை பல வருடங்களாக கேட்டு இருக்கிறேன். அதை மையமாக வைத்து புதிய படத்துக்கான கதையை உருவாக்கி இருக்கிறேன்" என்றார்.

பிரபல ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன். இவர் கரந்த 30 ஆண்டுகளாக நடிகைகளுக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் கிளம்பியது. பிரபல ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி, காரா டெலவிங்னி, கைனத் பால்ட்ரோ உள்பட 80 நடிகைகளுக்கு அவர் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்டது. அதாவது நடிகைகளின் ஆரம்ப காலகட்டத்தை இவர் பயன்படுத்திக்கொண்டது அம்பலமானது. இந்த விவகாரம் ஹாலிவுட் உலகை பரபரப்பாக்கியது.

ஹார்வி வெயின்ஸ்டீன் மீது 2 பெண்கள் அளித்த புகார் அடிப்படையில் அவரை நியூயார்க் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தொடர்புடையவை:

21 வயதில் பலத்காரம்... ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

60 நடிகைகளிடம் சில்மிஷம்; பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்

ஒரே நாளில் வெளியே வந்தார் நடிகைகளிடம் அத்துமீறிய ஹார்வே!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP