அலாஸ்காவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் பயங்கர நிலநடுக்கம்!
 | 

அலாஸ்காவில் 7.9 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடஅமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் சினியக் நகரின் தென்கிழக்கில் இருந்து 256 கிலோமீட்டர் தூரத்தில் இன்று அதிகாலை பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலின்படி 7.9 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இது வரையில் வெளியாகவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP