அமெரிக்காவில் தஞ்சம் கேட்ட 7,000 இந்தியர்கள்!

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 7,000 பேர் அமெரிக்காவிடம் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்ததாக ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 | 

அமெரிக்காவில் தஞ்சம் கேட்ட 7,000 இந்தியர்கள்!

கடந்த ஆண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 7,000 பேர் அமெரிக்காவிடம் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்ததாக ஐ.நா. அறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகம் முழுவதிலும் இருந்து, 2017 வரை, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, ஏழு கோடி பேர், அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். இதில், 1.62 கோடி பேர், 2017ல் இடம் பெயர்ந்தவர்கள்.

இதன்படி, சராசரியாக, 44 ஆயிரத்து, 500 பேர், ஒரு நாளில், அகதிகளாக வேறு நாடுகளுக்கு இடம் மாறிச் செல்கின்றனர். ஒவ்வொரு இரண்டு விநாடிக்கு ஒருவர் அகதியாகிறார். மொத்தம், 168 நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு விண்ணப்பித்து இருக்கின்றனர்.  அமெரிக்காவில் தஞ்சம் கேட்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. உலகிலேயே தஞ்சம் புகுவோர் அதிகம் நாடும் அரசாக அமெரிக்கா உள்ளது. 

இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும்,  7,400 பேர், அமெரிக்காவில் தஞ்சம் கேட்டுள்ளனர். அமெரிக்காவிடம் தஞ்சம் புகு விண்ணப்பங்கள் அளிப்பவர்களில் ஆப்கானிஸ்தானியர்கள் தான் அதிகப்படியானவர்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP