ரஷ்ய தூதரக அதிகாரிகள் 60 பேர் வெளியேற்றம்: ட்ரம்ப் அதிரடி

முன்னாள் ரஷ்ய உளவாளி பிரிட்டனில் ரசாயன விஷ தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், ரஷ்ய தூதரக அதிகாரிகள் 60 பேர் வெளியேற அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
 | 

செர்கெய் ஸ்கிரிபால் என்ற ஓய்வுபெற்ற ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் ரசாயன விஷ தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட பிறகு, பிரிட்டன் அரசு அந்த தாக்குதலுக்கு ரஷ்ய அரசை குற்றம் சாட்டியது. ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேற்றி நடவடிக்கை எடுத்தார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே. 

இந்நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பிரிட்டனின் கூட்டு நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் விடுத்தன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் மிகவும் நெருக்கமான போக்கை கடைபிடித்து வருவதால் முதலில் அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க தாமதித்தார். பிரிட்டன் அரசு நடவடிக்கை எடுத்து சுமார் 2 வாரங்களுக்கு பிறகு, இன்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யா மீது நடவடிக்கை எடுத்துள்ளார். 

60 ரஷ்ய தூதரக அதிகாரிகள் அமெரிக்க நகரங்களை விட்டு வெளியேற ட்ரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள ரஷ்ய அதிகாரிகள் அனைவரும் உளவாளிகள் என அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும், சியாட்டில் நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூடவும் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களின் நிறுத்தப்படும் தளத்திற்கு அருகே உள்ளதால் அந்த தூதரகத்தை மூடுவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP