அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளாக சிக்கித் தவிக்கும் 52 இந்தியர்கள்!

சட்டவிரோதக் குடியேறிகள் என்ற பெயரில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களில் 52 இந்தியர்களும் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
 | 

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளாக சிக்கித் தவிக்கும் 52 இந்தியர்கள்!

சட்டவிரோதக் குடியேறிகள் என்ற பெயரில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்களில் 52 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

சட்டவிரோதமாக குடியேறிய குடும்பங்களிலிருந்து குழந்தைகளை தனியே பிரித்து, அவர்களின் பெற்றோர்/ காப்பாளரை கைது செய்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு வலுப்பெற்று வந்தது. டிரம்ப் மனைவியே இதற்கு மிகக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். சூழ்நிலையில் அதில் இந்தியர்களும் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கைது செய்யப்பட்ட இந்தியர்கள் ஓரிகான் மாகாணத்தின் ஷெரிடான் பகுதியிலுள்ள சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர்கள் வங்கதேசம் மற்றும் நேபாள குடியேறிகளுடன் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய கொள்கைப்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களின் குழந்தைகள் ஆதரவற்ற சிறார்களாக வகைப்படுத்தப்பட்டு, அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைத் துறையின் பராமரிப்பில் இருக்கும் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ட்ரம்ப் அரசின் இந்தக் கொள்கைக்கு மெலினியா ட்ரம்ப், அமெரிக்க முன்னாள் அதிபரின் மனைவி லாரா புஷ் மற்றும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் கூட எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து சர்வதேச அழுத்தங்களை அடுத்து இந்தக் கொள்கையை விளக்கிக் கொள்வதாக ட்ரம்ப் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில், தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையினராக உள்ளனர். இந்தியா, வங்கதேசம், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு தான். கடந்த வருடம் மட்டும், 7,000 இந்தியர்கள் அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 

கடந்த மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 9-ஆம் தேதி வரை பெற்றோரிடம் பிரிக்கப்பட்டு சுமார் 2,342 குழந்தைகள் தனி இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக ஓரிகான் செய்திகள் கூறுகின்றன. ஆனால், அதில் எத்தனை பேர் இந்தியக் குழந்தைகள் என்பது இதுவரை தெரியவில்லை. இது குறித்த எந்தத் தகவலையும் இதுவரை வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிடவில்லை. இது குறித்து அமெரிக்க அரசிடம் பேசியதாகவும் தகவல்கள் இல்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP