5 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அரசு முடங்கியது!

அமெரிக்காவில் அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேற்றப்படாததால் அந்நாட்டு அரசு முடங்கியுள்ளது.
 | 

5 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க அரசு முடங்கியது!


அமெரிக்காவில் அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேற்றப்படாததால் அந்நாட்டு அரசு 5 வருடங்களுக்கு பிறகு இன்று முடங்கியுள்ளது.

அமெரிக்காவில் 2018ம் ஆண்டுக்கான அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கும் மசோதா செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நேரப்படி இன்று மதியம் 12 மணி முடிவதற்குள் மசோதா நிறைவேறினால் மட்டுமே அரசுத் துறைகளுக்கு நிதி சென்றடைந்து வேலைகள் நடைபெறும். இந்த நிலையில் இன்று செனட் அவையில் 60 உறுப்பினர்கள் வாக்களித்தால் மசோதா நிறைவேறியிருக்கும். ஆனால் 50 பேர் மட்டுமே வாக்களித்தனர். 

இதனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மசோதாவை நிறைவேற்றவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக அமெரிக்கா அரசு முடங்கியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்குள் மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் பாதுகாப்பை ரத்து செய்யும் திட்டத்திற்கு இக்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது தான் இந்த மசோதா தோல்விக்கும் காரணம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், "அரசு முடக்கம் என்பது அரசின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளான இன்று அமெரிக்க அரசு முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP