பெரு: பேருந்து விபத்தில் 36 பேர் பலி

பெரு நாட்டில் நேற்று நடைபெற்ற பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

பெரு: பேருந்து விபத்தில் 36 பேர் பலி

பெரு நாட்டில் நேற்று நடைபெற்ற பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் உள்ள பாசமயோ என்ற மலைப் பிரதேசத்தில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக டிரக் ஒன்றுடன் பஸ் நேருக்கு நேர் மோதியது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மலை பாதையில் இருந்து விலகி கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்தில் பஸ் அப்பளம் போல நொருங்கியது.

இந்த விபத்தில், பஸ்சில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்தனர். இதனை அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. படுகாயமடைந்த மற்ற பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு ஹெலிகாப்டர் மூலம் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். டிரக் சாலையில் தவறான பாதையில் வந்ததே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP