70 ஆண்டில் 1,000 சிறார்களை வன்புணர்வு செய்த 300 பாதிரியார்கள்: அமெரிக்காவில் அட்டூழியம் 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்களை வெவ்வேறு சந்தர்பங்களில் பாலியல் வன்புணர்வு செய்ததாக 300 பாதிரியார்கள் மீது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் அமெரிக்காவையே அதிர்ச்சியடை வைத்துள்ளது.
 | 

70 ஆண்டில் 1,000 சிறார்களை வன்புணர்வு செய்த 300 பாதிரியார்கள்: அமெரிக்காவில் அட்டூழியம் 

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்களை வெவ்வேறு சந்தர்பங்களில் பாலியல் வன்புணர்வு செய்ததாக 300 பாதிரியார்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக  நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்காவையே அதிர்ச்சியடை வைத்துள்ளது. 

அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவில் 17 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதன கீழ் 6 தேவாலயங்களை சேர்ந்த பாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அம்மாகாண உச்ச நீதிமன்ற ஜூரி விசாரித்து வருகிறது. 

இந்த நிலையில் ஜூரி அமைப்பு 900 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை பென்சில்வேனியா அட்டர்னி ஜெனரல் ஜோஸ் ஷாபிரோவிடம் தாக்கல் செய்துள்ளது. இதன் விவரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதன்படி, 1940ம் ஆண்டு முதல் கடந்த 70 ஆண்டுகளாக 300 பாதிரியார்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளை வன்புணர்வு செய்துள்ளதும். அவர்களில் பலர் பதவி உயர்வுகளை பெற்றும் பலர் ஓய்வு பெற்றும் விட்டனர். 

திடுக்கிடும் சம்பவங்கள்:

ஒரு குறிப்பட்ட சம்பவத்தில் தொண்டை அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 7  வயது சிறுமியை, பார்வையிட சென்ற பாதிரியார் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மற்றொரு பாதிரியார், 9 வயது சிறுவனை பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட செய்து பின் அவனது வாயை புனித நீரால் கழுவி பரிசுத்தம் செய்வதாக கூறியுள்ளார்.

மற்றொரு பாதிரியார் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவனையே பாவ மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இரு வேறு பாதிரியார்கள் வன்புணர்வு செய்ததில் 2 சிறுமிகள் கர்ப்பமாக்கியுள்ளனர். அதில் ஒரு சிறுமியின் கர்ப்பத்தை சட்ட அனுமதியில்லாமல் கலைக்க வற்புறுத்தியுள்ளனர். அந்த மற்றொரு சிறுமிக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இது போன்ற பல திடுக்கிடம் சம்பவங்களை ஜூரியின் அறிக்கையில் பட்டியலிட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தப்பித்த 'பலே' பாதிரியார்கள்...

இது குறித்த் விவகாரங்கள் வெளியானதிலிருந்து கத்தோலிக்க கிறிஸ்துவ பிரிவில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் இதில் செல்வாக்கை வைத்து, பல 'பலே' பாதிரியார்கள் சாமர்த்தியமாக தப்பியுள்ளனர். ஆனால், சிறார்களை நிர்பந்தித்து பயன்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து காலம் காலமாக அரங்கேறி வந்துள்ளதாக அந்த அறிக்கை விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாடிகனிலும் முறையீடு: 

பாதிரியார்கள் இந்த நடவடிக்கைகள் குறித்து தனி நபர்கள் மூலமாகவும் கத்தோலிக்க குழுக்கள் மூலமாகவும் வாடிகன் அவையின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், பாதிரியார்களை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் எதுவும் இயற்றப்படவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த திடுக்கிடும் விவகாரம் அமெரிக்க மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP