20 இந்தியர்களுக்கு சிறை தண்டனை: நிதி மோசடி வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி 

அமெரிக்க அதிகாரிகள் போல நடித்து மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் 21 இந்தியர்களுக்கு நியூயார்க் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
 | 

20 இந்தியர்களுக்கு சிறை தண்டனை: நிதி மோசடி வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் அதிரடி 

அமெரிக்க அதிகாரிகள் போல நடித்து மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்த வழக்கில் 21 இந்தியர்களுக்கு நியூயார்க் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், கால் சென்டர் என்ற பெயரில் போலி நிறுவனத்தை நடத்தி வந்த 21 இந்தியர்கள், அமெரிக்காவில் இடைத்தரகர்கள் உதவியுடன், அந்நாட்டு மக்களின் தனிப்பட்ட தகவல்களை திரட்டி, அந்நாட்டு மூத்த குடிமக்கள், பணக்காரர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தகவல்களை கூறி மிரட்டல் விடுத்தனர்.

பின், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவதாக கூறி மிரட்டினர். இதனால் மிரண்டு போன பல அமெரிக்கர்கள், குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினர். அதன் மூலம் இந்த கும்பல் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் செய்தது.

இது குறித்த புகாரை அடுத்து, விசாரணை நடத்திய அமெரிக்க போலீசார், மோசடியில் ஈடுபட்ட 51 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர்.  இதில் அங்கு வசிக்கும் சில இந்தியர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம், மோசடியில் ஈடுபட்ட இந்தியர்கள் 20 பேர் உட்பட மொத்தம் 21 பேருக்கு 4 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இவர்கள்  20 பேரும் தண்டனை காலம் முடிந்ததும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP