கலிஃபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

கலிஃபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாங் பீச் எனும் இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவமானது நடைபெற்றுள்ளது. அந்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 2:25 மணி அளவில் அங்குள்ள வழக்கறிஞர்கள் அலுவலகம் ஒன்றிற்குள் நுழைந்த முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கிருந்த மற்றொரு ஊழியரை சுட்டுக் கொன்றார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு வெளியேறினர்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னை தானே  துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அந்த அலுவலகத்தில் பணி புரிந்த மற்றொரு ஊழியருக்கும் காயம் ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை தொடர்பான பிரச்சனை காரணமாகவே வந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. சாலைகள் முழுவதும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல் துறை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP