லண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதம் தற்காலிக அனுமதி!

லண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதங்களுக்கு தற்காலிகமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
 | 

லண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதம் தற்காலிக அனுமதி!

லண்டனில் உபேர் நிறுவனம் இயங்க 15 மாதங்களுக்கு தற்காலிகமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 

பிரபல கால் டாக்ஸி நிறுவனமான 'உபேர்' நிறுவனம் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமையிடமாகக்  கொண்டு செயல்பட்டு வரும் உபேர் நிறுவனம், மற்ற நாடுகளில் செயல்பட அந்தந்த நாடுகளில் உரிமம் பெற வேண்டியது அவசியம். லண்டனில் கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் உரிமம் காலாவதி ஆனதையடுத்து, உரிமத்தை புதுப்பிக்க அந்நாட்டு அரசு அனுமதி தர மறுத்து விட்டது. வாடிக்கையாளர்களுடனான உபேர் நிறுவனத்தின் அணுகுமுறையில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் காரணமாக உபேர் நிறுவன உரிமம் புதுப்பித்ததற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. 

இதையடுத்து, நிறுவனம் இயங்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உபேர் நிறுவனம் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணையின் போது, 'அரசு கூறிய குறைகள் சரி செய்யப்பட்டு விட்டது. எனவே உரிமம் புதுப்பிக்க அனுமதி வழங்குமாறு  அந்நிறுவனம் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 15 மாதங்களுக்கு மட்டும் லண்டனில் உபேர் நிறுவனம் இயங்க தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP