15 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை... ஆனால் CEO-க்கு 155 கோடி!

அமெரிக்காவின் பிரபல கார் நிறுவனமான ஜி.எம்-ன் தலைவர் மேரி பாரா, ஆண்டுக்கு 22 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெறும், அதேநேரம், செலவினங்களை குறைப்பதாக கூறி 15,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 | 

15 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை... ஆனால் CEO-க்கு 155 கோடி!

அமெரிக்காவின் பிரபல கார் நிறுவனமான ஜி.எம்-ன் தலைவர் மேரி பாரா, ஆண்டுக்கு 22 மில்லியன் டாலர்களை சம்பளமாக பெறும், அதேநேரம், செலவினங்களை குறைப்பதாக கூறி 15,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவின் மிகப் பெரிய கார் நிறுவனம் ஜி.எம். இந்த நிறுவனத்திற்கு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழிற்சாலைகள் உள்ளன. சமீபத்தில், செலவினங்களை குறைப்பதாக கூறி, அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள ஐந்து தொழிற்சாலைகளை மூட ஜி.எம் முடிவெடுத்தது. மேலும், 15,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதாகவும் ஜிஎம் தெரிவித்தது. 

ஜிஎம் நிறுவனத்தின் இந்த முடிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அந்த நிறுவனத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் எதிர்க்கட்சியினர் வரை அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க அரசிடம் இருந்து பல்வேறு வரிச் சலுகைகளை பெற்று வரும் ஜி.எம் உள்ளிட்ட கார் நிறுவனங்கள், கடந்த 2007ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார சரிவின் போது, திவாலாகும் நிலையில் இருந்தன.

அப்போது மக்கள் வரி பணத்தை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களை அமெரிக்க அரசு காப்பாற்றியது. இதை குறிப்பிட்டு ட்விட்டரில் எழுதிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், "ஜெனரல் மோட்டார்ஸ் எடுத்துள்ள நடவடிக்கை மிகவும் மோசமானது. அமெரிக்காவில் உள்ள மூன்று நிறுவனங்கள் மூடப்படும் நிலையில், மெக்சிகோ, சீனாவில் எந்த நிறுவனமும் மூடப்படவில்லை. அமெரிக்க மக்கள், ஜி.ம்-மை காப்பாற்றினர். அதற்கான மரியாதை இதுதானா? இதனால் ஜி.எம் நிறுவனத்திற்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் மின்சார கார் சலுகையையும் நிறுத்த முடிவெடுத்துள்ளோம்" என ட்ரம்ப் ட்வீட் செய்தார்.

அதேநேரம் எதிர்க்கட்சிகள் சார்பாக பெரிய எம்.பி வேட்பாளர் ரிச்சர்ட் ஒஜெடா, "ஜிஎம் நிறுவனத்தின் தலைவர் மேரி பாரா 22 மில்லியன் டாலர் சம்பளமாக பெறுகிறார். அந்த நிறுவனத்தில் பணியாற்றும் சாதாரண தொழிலாளரை விட 300 மடங்கு அதிக சம்பளம் வாங்கும் நேரத்தில், தனது சம்பளத்தை குறைக்க முன்வராமல், 15000 தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது மிகப் பெரிய அநியாயம்" என குறிப்பிட்டுள்ளனர்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP