ஒரு துளிநீர் தரையை தொட 14 நிமிடங்கள்... ஏஞ்சல் நீர்வீழ்ச்சி !

உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டிலுள்ள ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான். இதுவே உலகில் மிக உயரமான இடத்திலிருந்து எந்த தடையும் இன்றி விழுகின்ற நீர்வீழ்ச்சியாகும்.
 | 

ஒரு துளிநீர் தரையை தொட 14 நிமிடங்கள்... ஏஞ்சல் நீர்வீழ்ச்சி !

அனைவருக்கும் அமெரிக்கா - கனடா எல்லையில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சி பற்றி தெரிந்திருக்கும், பலர் அதைத்தான் உயரமான நீர்வீழ்ச்சியாக கருதிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், உண்மையில் உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள‌ வெனிசுலா நாட்டிலுள்ள  ஏஞ்சல் நீர்வீழ்ச்சி தான். இதுவே உலகில் மிக உயரமான இடத்திலிருந்து எந்த தடையும் இன்றி விழுகின்ற நீர்வீழ்ச்சியாகும். 

ஒரு துளிநீர் தரையை தொட 14 நிமிடங்கள்... ஏஞ்சல் நீர்வீழ்ச்சி !

பொலிவார் மாகாணத்தில் உள்ள அவ்யான் தேபுய் என்ற மலையுச்சியில், சுமார் மூவாயிரத்து 230 அடி உயரத்தில் இருந்து கீழே பாய்கிறது இந்த ஏஞ்சல் அருவி. சுமார் இரண்டாயிரத்து 647 அடி நீளத்துக்கு எவ்வித தங்கு தடையும் இல்லாமல் இதன் நீர் கீழே விழுகிறது.  இதன் ஒரு துளி நீர் தரையை அடைய 14 நிமிடங்கள் எடுக்கின்றன. நீர் வீழ்ச்சியிலிருந்து விழும் நீரானது தரையை அடையும் முன்னதாக அங்கு வீசும் காற்றினால், பெருமளவில் பனித்துளிகள்போல் ஆவியாக பறந்து, எஞ்சியவையே கெரெப் என்னும் ஆற்றில் விழுகின்றன.

ஒரு துளிநீர் தரையை தொட 14 நிமிடங்கள்... ஏஞ்சல் நீர்வீழ்ச்சி !

பின்னர் சுருண் ஆற்றில் கலக்கிறது. 1933ஆம் ஆண்டு அமெரிக்க விமானி ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தைத் தேடி மலைகளின்மேல் பறந்து சென்றபோது நீர் வீழ்ச்சியைக் கண்டார். அதன் பிறகே வெளி உலகிற்குத் தெரிய வந்தது. அதனால் அதற்கு அவரின் பெயரால் ஏஞ்சல் நீர்வீழ்ச்சி என அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதியை உலகின் பாரம்பரியச் சின்னமாக ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது. 

ஒரு துளிநீர் தரையை தொட 14 நிமிடங்கள்... ஏஞ்சல் நீர்வீழ்ச்சி !

இந்த நீர்வீழ்ச்சி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வீழ்ந்துகொண்டிருக்கிறது. செவ்விந்தியர்கள் இதனை சுருண் மேரு என்று அழைத்தனர். இது உள்நாட்டு மக்களின் சொத்து. உள்நாட்டு மக்களுக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று என்பதால் இந்த நீர்வீழ்ச்சியை கீரிபாகுபாய் வீனா என்ற பெயரில் அழைக்குமாறு வெனிசுலா ஜனாதிபதி ஹீகோ சாவேஸ் 2009 இல் அறிவித்தார். இதற்கு நீர்வீழ்ச்சி மிகவும் ஆழமான இடத்தில் விழுதல் என்பது பொருளாகும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP