மிஸ்ஸெளரி ஏரியில் படகு மூழ்கி 13 பேர் பலி

மிஸ்ஸெளரி ஏரியில் படகு மூழ்கி 13 பேர் பலி
 | 

மிஸ்ஸெளரி ஏரியில் படகு மூழ்கி 13 பேர் பலி

அமரிக்காவின் மிசூரி பகுதியில் உள்ள ஏறி ஒன்றில் 13 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு மூழ்கி 13 பேர் பலி. வாஷிங்டன், அமெரிக்காவில், மிசவுரி மாகாணத்தின், பிரான்சன் பகுதியில் உள்ள, டேபிள் லாக் ஏரி, சுற்றுலா தலமாக உள்ளது.அந்த ஏரியில் சென்று கொண்டிருந்த படகு புயலில் சிக்கி மூழ்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏரியின் மையப் பகுதியில் சென்றபோது, படகு திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. படகு மூழ்கியதில் நீரில் மூழ்கி பலியான 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. 14 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் நான்கு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 60 மையில் வேகத்தில் காற்று வீசியதே இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. இன்னொரு படகில் சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளார். அதில் படகு தண்ணீரில் சிக்கி தத்தளிப்பதும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மூழ்குவதும் படமாக்க பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP