கோஸ்டா - ரிக்கா விமான விபத்தில் 12 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
 | 

கோஸ்டா - ரிக்கா விமான விபத்தில் 12 பேர் பலி

மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிக்காவில் நேற்று நடைபெற்ற விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.

நேஷர் ஏர் எனப்படும் உள்ளூர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று 2 விமான குழுவினர் மற்றும் 10 பயணிகளுடன் நேற்று காலை 10:30 மணி அளவில் தலைநகர் நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த அனவைரும் உயிரிழந்தனர். பயணிகள் 10 பேரும் வெளிநாட்டினர் என்பதும், சுற்றுலாவுக்காக கோஸ்டா ரிக்கா வந்திருந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

அமெரிக்காவில் இருந்து அதிகமானோர் கோஸ்டா - ரிக்காவிற்கு சுற்றுலா வருவதால், உயிரிழந்தவர்கள் அமெரிக்காவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என முதலில் சந்தேகிக்கப்பட்டது. இதனை உயிரிழந்தவர்களில் அமெரிக்கர்கள் யாராவது இருந்தனரா என்பது குறித்து அந்நாட்டு தூதரக அதிகாரிகள் தகவல் சேகரித்து வந்தனர். இறுதியில் விபத்தில் பலியானவர்கள் 10 பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து நடத்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP