10 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு: ட்ரம்ப் மீது புதிய சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் , தனது ஓட்டல்கள் மூலம் 10 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் மீது நாடாளுமன்ற கமிட்டி விசாரணை நடத்த வாய்ப்பு அதிகரித்துள்ளது.
 | 

10 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு: ட்ரம்ப் மீது புதிய சர்ச்சை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழாவில் , தனது ஓட்டல்கள் மூலம் 10 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர் மீது நாடாளுமன்ற கமிட்டி விசாரணை நடத்த வாய்ப்பு அதிகரித்துள்ளது

2017 ஆண்டு, அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றபோது, அவரது பதவியேற்பு விழா ஒருங்கிணைக்கப்பட்ட விதம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தன. இதுதொடர்பாக, ட்ரம்ப் கட்சி  தலைமை வகித்த அப்போதைய செலவினங்களுக்கான அமெரிக்க நாடாளுமன்ற கமிட்டி, போதிய அளவு விசாரணை நடத்தவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கீழ் சபையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால்,  எதிர்கட்சியை சேர்ந்த கமிட்டி நிர்வாகிகள், ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் முறைகேடுகள் நடந்ததா என விசாரணை நடத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப்பின் பதவியேற்பு விழா கமிட்டிக்கு, 107 மில்லியன் டாலர்கள், அதாவது சுமார் 700 கோடி ரூபாய்  நன்கொடையாக வழங்கப்பட்டது. அதில் பெரும்பாலான தொகை, பலருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டாலும், டொனால்ட் ட்ரம்ப்பின் ஓட்டல்களில் பலரை தங்க வைத்து, ட்ரம்ப் லாபம் சம்பதித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், ட்ரம்ப்பின் பதவியேற்பு விழா கமிட்டி அவரது உதவியாளர்களுக்கு மட்டும் 10,000 டாலர்களுக்கு மேக்கப் செலவுகள் செய்ததாகவும், வாஷிங்டனில் உள்ள ட்ரம்ப் சர்வதேச ஓட்டலுக்கு, 10 கோடி ரூபாய் அளவுக்கு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதிபர் பதவியை லாபகரமான செயல்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற விதி உள்ள நிலையில், இது தொடர்பாக தொடர்ந்து எதிர்க்கட்சி நிர்வகிக்கும் கமிட்டிகள் விசாரணை செய்ய அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP