விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையதள செய்தி நிறுவனமான விக்கிலீக்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 | 

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

விக்கிலீக்ஸ் நிறுவனரான  ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இணையதள செய்தி நிறுவனமான விக்கிலீக்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட  நாடுகளின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்குற்றங்களுக்காக, இதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்த அமெரிக்கா முயன்றது.

ஆனால் அவர்,  பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் புகுந்ததையடுத்து, அசாஞ்சேவை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக அவருக்கு கொடுத்து வந்த பாதுகாப்பை வாபஸ் பெறுவதாக,  ஈக்வடார் தூதரகம் அண்மையில் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ஜூலியன் அசாஞ்சேவை லண்டன் போலீஸார், கடந்த மாதம் 11 -ஆம் தேதி (ஏப்ரல் 11) கைது செய்தனர்.

இதையடுத்து அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு நிபந்தனை கிடைத்தாக தெரிகிறது. இதனிடையே, ஜாமீன் நிபந்தனைகளை மீறியதையடுத்து, அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் (கிட்டத்தட்ட ஓராண்டு) சிறைத் தண்டனை விதித்து லண்டன்  நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP