இலங்கைக்கு செல்வதை தவிர்க்க இங்கிலாந்து அரசு அறிவுறுத்தல்

இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்த்துக்கொள்ளுமாறு அந்நாட்டு மக்களுக்கு இங்கிலாந்து அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.
 | 

இலங்கைக்கு செல்வதை தவிர்க்க இங்கிலாந்து அரசு அறிவுறுத்தல்

இலங்கைக்கு பயணம் செய்வதை இயன்றவரை தவிர்க்குமாறு இங்கிலாந்து அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தினமன்று இலங்கையின் பல இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவங்களின் காரணமாக 350 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களின்போது உயிரிழந்தவர்களில் 8 பேர் இங்கிலாந்து நாட்டை சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெளிநாட்டவர்கள் வரும் இடங்கள் உள்பட மேலும் பல இடங்களில் கூடுதல் தாக்குதல்களை தீவிரவாதிகள்  நடத்த வாய்ப்புகள் இன்னும் காணப்படுவதாக இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைசகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,  இலங்கையில் ஏற்கனவே தங்கியுள்ள இங்கிலாந்தினா் மிகுந்த கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் இவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP