இங்கிலாந்து: ரகசிய தகவல்களை வெளியிட்ட ராணுவ அமைச்சர் நீக்கம் !

இங்கிலாந்தில் அரசின் ரகசிய தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் காரணமாக, ராணுவ அமைச்சர் கவின் வில்லியம்சன்னை, பிரதமர் தெரசா மே பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.
 | 

சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமாக ஹூவாய் மூலமாக இங்கிலாந்தில் 5 ஜி தொலைதொடர்பு சேவையை வழங்க பிரதமர் தெரசா மேவின் அரசின் திட்டமிட்டது. இந்த நிலையில், இந்த திட்டம் குறித்த அரசின் உயர்மட்ட ரகசிய தகவல்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் வாயிலாக கசிந்ததாகவும்,  இது குறித்து ராணுவ அமைச்சராக பதவி வகித்து வந்தகவின் வில்லியம்சன் மீது குற்றச்சாட்டும் எழுந்தது.  ஆனால் அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்தார்.  

இந்தநிலையில் அரசின் திட்டம் குறித்த ரகசிய தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், கவின் வில்லியம்சன், பிரதமர் தெரசா மேயால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதில் பென்னி மோர்டன்ட் புதிய ராணுவ அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.  தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து வரும் கவின், இது நடவடிக்கை பழிவாங்குவது போல் தெரிகிறது என கூறியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP