எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஜெரிமி கார்பினின் ட்விட்டர் பதிவு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸின் கருத்துக்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் ரீதியில் உள்ளதாக பாஜக குற்றச்சாட்டி வந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஜெரிமி கார்பினின் ட்விட்டர் பதிவு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்துள்ளது.
 | 

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஜெரிமி கார்பினின் ட்விட்டர் பதிவு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரஸின் கருத்துக்கள், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் ரீதியில் உள்ளதாக பாஜக குற்றச்சாட்டி வந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஜெரிமி கார்பினின் ட்விட்டர் பதிவு, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்றதில், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையே அதிருப்தியான சூழல் நிலவி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு குற்றம் சுமத்தி வந்தது. இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஜெரிமி கார்பின் தனது ட்விட்டர் பதிவில், இங்கிலாந்து காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான ஜம்மு காஷ்மீரின் நிலை குறித்த உரையாடல் பற்றி பதிவிட்டிருந்தார். இது ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்துள்ளது. 

 

 

இவரின் இந்த பதிவை தொடர்ந்து, இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிட வேண்டாம் என்று மற்ற நாடுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், எதிர்கட்சியே இப்படி ஒரு காரியத்தை செய்வது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பாஜக தரப்பு காங்கிரஸ் கட்சி மீது குற்றம் சாட்டி வருகின்றது.

மத்திய அரசின் இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த காங்கிரஸ், அப்போதும் இப்போதும் ஒரு விஷயத்தை தான் குறிப்பிட விரும்புவதாகவும் காஷ்மீர் விவகாரம் குறித்த மத்திய அரசின் பார்வையே, காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது என்றும் இங்கிலாந்தில் நடந்தது தற்செயலாக நடந்த ஒரு சந்திப்பே தவிர, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஏற்பாடு அல்ல என்றும் கூறியுள்ளது.

"காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டதை குறித்தோ, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை குறித்தோ நாங்கள் எதுவும் கூறவில்லை. இந்திய மக்களின் நலனில் எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசின் பார்வையே, காங்கிரஸ் கட்சிக்கும் உள்ளது" என்று ஜம்மு காஷ்மிர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் ரீதியில் காங்கிரஸின் பேச்சுக்கள் இருக்கிறது என்ற, பாஜக உறுப்பினர்களின் குற்றச்சாட்டிற்கு, காங்கிரஸ் தலைவர் சசி தரூர் ஏற்கனவே பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP