திப்பு சுல்தானின் ஆயுதங்கள் ஏலம்- அதிக விலைக்கு வாங்கப்பட்டன

லண்டனில் மைசூரின் திப்பு சுல்தானின் ஆயுதங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதனை மக்கள் ஆர்வத்துடன் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.
 | 

திப்பு சுல்தானின் ஆயுதங்கள் ஏலம்- அதிக விலைக்கு வாங்கப்பட்டன

லண்டனில் மைசூர் நகரை மையமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த திப்பு சுல்தானின் ஆயுதங்கள் ஏலத்தில் விடப்பட்டன. இதனை மக்கள் ஆர்வத்துடன் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். 

திப்பு சுல்தான் 1750ம் ஆண்டு நவம்பர் 20ல் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான்.

பிரிட்டிஷ் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திப்பு, தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார்.

திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தின்போது போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி போன்றவற்றை லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஏலம் விட்டது. இதில் திப்பு சுல்தானின் ஆயுதங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 97 லட்சத்து 27 ஆயிரத்து 497 ரூபாய்) ஏலம் போனது.

மேலும் வெள்ளி பூண் கொண்ட துப்பாக்கி, மற்றும் குறுவாள் ஆகியவை 60 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 54 லட்சத்து 54 ஆயிரத்து 880 ரூபாய்) ஏலத்திற்கு விடப்பட்டன. 

இந்த துப்பாக்கிகள் மற்ற துப்பாக்கிகளை போல் இல்லாமல் மிகவும் அதிக சேதம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்கத்தில் முலாம் பூசப்பட்ட வாள் காண்போரை கவரக்கூடிய வகையில் இருந்தது. இந்த வாள் 18 ஆயிரத்து 500 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் 16 லட்சத்து 82 ஆயிரத்து 519 ரூபாய்) ஏலம் போனது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP