அடையாள அட்டை இல்லாவிட்டால் ஆபாச இணையதளங்கள் 'கட்'

பிரிட்டனில் ஆபாச இணையதளங்கள் மீதான வயது வரம்பு தடை, வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே ஆபாச இணையதளங்களை பார்க்க முடியும் என்ற நிலை இனி ஏற்பட இருக்கிறது.
 | 

அடையாள அட்டை இல்லாவிட்டால் ஆபாச இணையதளங்கள் 'கட்'

பிரிட்டனில் ஆபாச இணையதளங்கள் மீதான வயது வரம்பு தடை, வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இதனால், அடையாள அட்டையை காட்டினால் மட்டுமே ஆபாச இணையதளங்களை பார்க்க முடியும் என்ற நிலை இனி ஏற்பட இருக்கிறது. 

லட்சக்கணக்கான ஆபாச இணையதளங்கள் உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில், சர்வதேச விதிகளின் படி, குழந்தைகள் கண்களில் படாதவாறு அவை கட்டுப்படுத்தப்பட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் நுழையக் கூடாது என்ற விதி பெரும்பாலும் இருந்தாலும், அதை எளிதாக யார் வேண்டுமானாலும் மீற முடியும் நிலை உள்ளது. 

பிரிட்டன் அரசு, ஆபாச இணையதளங்களை குழந்தைகளின் கண்களில் படாதவாறு கட்டுப்படுத்த கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் எடுத்து வருகிறது. இதன்படி, AgelD என்ற வயது சரிபார்ப்பு இணையதளத்தின் மூலம், வாடிக்கையாளர்களின் வயதை கண்டறிந்து, 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் ஆபாச இணையத்தளங்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த AgeID செயலியில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களை பதிவு செய்ய, ஈ மெயில் ஐடி, பாஸ்வோர்டு, ஓட்டுனர் உரிமம் போன்ற அடையாள அட்டையில் ஏதாவது ஒன்றை அதில் பதிவு செய்ய வேண்டும். 

3 மிகப்பெரிய ஆபாச இணையதளங்களை நடத்தி வரும் மைண்ட்கீக் என்ற நிறுவனம், இந்த AgeID-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல், இதுபோன்ற செயலி மூலம் புதிய  விதிகளை பின்பற்றாத அனைத்து ஆபாச இணையத்தளங்களும், சுமார் ரூ.2.25 கோடி அபராதம் விதிக்கப்படும் அல்லது இணையதளம் மொத்தமாக முடக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP