ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்சிட் கிடையாது: தெரசா மே-வுக்கு மீண்டும் தோல்வி

ஐரோப்பிய யூனியனில் இருந்து, எந்த ஒப்பந்தமும் இல்லாமல் பிரிட்டன் வெளியேற கூடாது என்ற மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 | 

ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்சிட் கிடையாது: தெரசா மே-வுக்கு மீண்டும் தோல்வி

ஐரோப்பிய யூனியனில் இருந்து, எந்த ஒப்பந்தமும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறக் கூடாது என்ற மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் தெரசா மே-வுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக்குவதற்காக வரையப்பட்டுள்ள பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த ஒப்பந்தத்தால், பிரிட்டன் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை ஆதரிக்க மறுத்து விட்டனர்.

ஆனாலும், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறினால், பிரிட்டன் பொருளாதாரம் வலராறு காணாத அளவுக்கு பெருமளவு பாதிக்கப்படும் என்பதால், இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்க பிரதமர் மே கோரி வருகிறார். வேறு எந்த சலுகைகளும் வழங்க முடியாது என ஐரோப்பிய யூனியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்ட நிலையில், வரும் 29ம் தேதியுடன் ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிகிறது. 

இரண்டு முறை தெரசா மே-வின் பிரெக்சிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், தெரசா மே நேற்று கொண்டு வந்த ஒரு மசோதாவில், வரு 29ம் தேதிக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால், ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறும் நிலை ஏற்படும் என கோரப்பட்டிருந்தது.

அதை வீழ்த்தி, ஒப்பந்தம் இல்லாமல் வெளியேற தடை விதித்து புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால், பிரெக்சிட் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் காலக்கெடுவை நீட்டிக்க ஐரோப்பிய யூனியனிடம் பிரிட்டன் கோரிக்கை வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரண்டு முறை தனது கட்சியினரின் ஆதரவு கிடைக்காமலேயே தன் பிரெக்சிட் ஒப்பந்தம் தோல்வியடைந்த நிலையில், அதன் மீது 3வது முறையாக நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்த உள்ளார் மே. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP