பிரிட்டனின் அடுத்த பிரதமர் இவர் தான்!

பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்ய உள்ளார். அவர் தமது ராஜினாமா கடிதத்தை, பிரிட்டன் ராணி எலிசபெத்திடம் நாளைக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலுக்கான முடிவு இன்று வெளியாகியுள்ளது.
 | 

பிரிட்டனின் அடுத்த பிரதமர் இவர் தான்!

பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்ய உள்ளார். அவர் தமது  ராஜினாமா கடிதத்தை, பிரிட்டன் ராணி எலிசபெத்திடம் நாளைக்கு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலுக்கான முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில், ஆளும் கன்சர்வேட் கட்சியைச் சேர்ந்த, லண்டன் மாநகர முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெரிமை ஹன்ட்டுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இதில், 45,497 வாக்குகள் வித்தியாசத்தில் ஜான்சன் வெற்றி பெற்றுள்ளார். ஜான்சன் மொத்தம் 92,153 வாக்குகளையும் , ஹன்ட் 46, 656 வாக்குகளையும் பெற்றனர்.

இதையடுத்து, பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் விரைவில் பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது. "பிரதமராக பொறுப்பேற்றதும் முதல் வேலையாக, வரும் அக்டோபர் 31 -ஆம் தேதிக்குள், பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்" என, ஜான்சன் சூளுரைத்துள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP