அப்பாவான பிரிட்டன் இளவரசர் ! 

பிரிட்டன் இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்க்கல் தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரிட்டன் அரச பரம்பரையின் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் மார்க்கல் தம்பதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் 19 -ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
 | 

அப்பாவான பிரிட்டன் இளவரசர் ! 

பிரிட்டன் இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்க்கல் தம்பதிக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

பிரிட்டன் அரசப் பரம்பரையின் இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் மார்க்கல் தம்பதிக்கு கடந்த ஆண்டு மே மாதம் 19 -ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இத்தம்பதிக்கு இன்று அதிகாலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 3.25 கிலோகிராம் எடை உள்ளதென்றும், தாயும் -சேயும் நலமாக உள்ளதாகவும் பிரிட்டன் அரண்மனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.

இளவரசர் ஹாரி, வேல்ஸ் இளவரசர் சார்லஸ் - மறைந்த இளவரசி டயானா தம்பதியின் மகன் என்பதும், மார்க்கல் பிரபல ஹாலிவுட் நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP