இங்கிலாந்தில் மீண்டும் ரசாயன தாக்குதல்: ரஷ்யர் உட்பட இருவர் பாதிப்பு

இங்கிலாந்தில் சாலிஸ்பரி சுற்றுலா நகரம் அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டச் சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

இங்கிலாந்தில் மீண்டும் ரசாயன தாக்குதல்: ரஷ்யர் உட்பட இருவர் பாதிப்பு

இங்கிலாந்தில் சாலிஸ்பரி சுற்றுலா நகரம் அருகே உணவகம் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷ்யர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டச் சம்வம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் சாலிஸ்பரி என்னும் சுற்றுலா நகரம் அருகே உள்ளது ஸ்டேன்ஹெஞ்ச் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்தூண். இதைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். வார இறுதி நாட்களில் இங்கு திருவிழா போல கூட்டம் கூடும். 
 
இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சாலிஸ்பரி நகரின் ஹை ஸ்டீரிட் தெருவில் உணவகத்தில் 40 வயது மதிக்க ஒரு ஆணும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து போலீசார் ஹை ஸ்டீரிட் பகுதியை சுற்றி வளைத்தனர். போக்குவரத்து தடை செயப்பட்டு உணவகத்துக்கு வந்து சென்றவர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து விசாரணையை துரிதப்படுத்தினர். இவர்கள் இருவர் மீது 'நோவிசாக்' என்னும் நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது. 

இந்த நச்சுப் பொருள் ரஷ்ய ராணுவம் மற்றும் உளவுத்துறையில் ரகசியமாக பயன்படுத்துவதாக கூறப்படுவது உண்டு.

கடந்த மார்ச் மாதம் ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கோய் ஸ்கிர்பால் தனது மகள் யூலியாவுடன் இதே சாலிஸ்பரி நகரில் நச்சுப் பொருளால் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கிடந்ததும், பின்னர் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படனர். பின்னர், இவர்கள் மீது நரம்பு மண்டலத்தை பாதிக்க வைத்து உயிரை இழக்கச் செய்யும் 'நோவிசாக்' நச்சுப் பொருள் வீசப்பட்டது தெரியவந்தது.

கடந்த ஜூலை மாதம் இதே சாலிஸ்பரி நகரின் புறநகரான அமெஸ்பரியில் மர்ம மனிதர்கள் வாசனை திரவிய பாட்டில் மூலம் நடத்திய 'நோவிசாக்' தாக்குதலில் டான் ஸ்டர்கெஸ் என்ற பெண் உயிரிழந்தார். அவருடைய காதலர் சார்லி ரோவ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவங்களில் ரஷ்ய உளவுத்துறைக்கு தொடர்பு இருப்பதாக இங்கிலாந்து அரசு குற்றம் சாட்டியது. ஆனால் இதை ரஷ்ய அதிபர் புடின் மறுத்தார். மீண்டும் நடந்தேறியுள்ள இந்தச் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP