விமான விபத்தில் மாயமான கால்பந்து வீரரின் உடல் கண்டெடுப்பு!

விமான விபத்தில் மாயமான பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவின் உடல் ஆங்கில கால்வாயில் இன்று கண்டெடுக்கப்பட்டது.சாலாவின் மறைவு உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 | 

விமான விபத்தில் மாயமான கால்பந்து வீரரின் உடல் கண்டெடுப்பு!

விமான விபத்தில் மாயமான பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சாலாவின் உடல் ஆங்கில கால்வாயில் இன்று கண்டெடுக்கப்பட்டது.

அவரது உடல் போர்ட்லேண்ட் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு முறைப்படி அடையாளம் காணப்பட்டது என பிரிட்டன் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த 28 வயது வீரரான சாலாவின் மறைவுக்கு அர்ஜென்டினா அதிபர் மெளரிசியோ மெக்ரி  தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சாலாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜென்டினா அரசு அவர்களுக்கு தேவையான எல்லா உதவுகளையும் செய்யும்" எனத் தெரிவித்துள்ளார்.

அகால மரணம் அடைந்த சாலாவுக்கு அர்ஜென்டினாவின் முன்னாள், இன்னாள் கால்பந்து வீரர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.சாலாவின் மறைவு உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் விளையாடி வரும் வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த அணி கார்டிஃப் சிட்டி. இந்த அணி, பிரான்ஸ் நாட்டின் நான்டஸ் அணியின் நட்சத்திர வீரர் எமிலியானோ சாலாவை வாங்கியது. சுமார் 138 கோடி ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாலா பெற்றிருந்தார்.

 நான்டஸ் அணியில் தனது சக வீரர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, பிரான்சிலிருந்து வேல்ஸ் நாட்டுக்கு விமானத்தில் சாலா வந்து கொண்டிருந்தார். இரண்டு பேர் மட்டும் செல்லக்கூடிய சிறிய  ரக விமானத்தில் அவர் பயணித்துக் கொண்டிருந்தபோது, வேல்ஸ் அருகே கடந்த ஜனவரி 21-ஆம்தேதி, சாலா பயணித்த விமானம் மாயமானது.

அவரையும், 59 வயதான விமான பயணியையும் தேடும் பணி இரண்டு வாரங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP