லயன் ஏர் விமானத்தின் 2ஆவது கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்

கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான இந்தோனேசிய லயன் ஏர் விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்ட ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், இரண்டாவது கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் உடலை மீட்கும் பணியும் தீவிரம்.
 | 

லயன் ஏர் விமானத்தின் 2ஆவது கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்

கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தின் சிதைந்த பாகங்களை மீட்ட ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், இரண்டாவது கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். 

ஜகர்த்தாவில் இருந்து பான்கால் பியாங் என்ற நகரை நோக்கி, 189 பேருடன், கடந்த 29ஆம் தேதி லயன் ஏர் போயிங் சென்றது. விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஜாவா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் இருந்த 189 பேரும் உயிரிழந்தனர். கடலில் மிதந்த விமான பாகங்களையும், கருப்பு பெட்டியையும் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அண்மையில் கண்டெடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, விமானிகளுக்கு இடையிலான உரையாடல்கள் அடங்கிய மற்றொரு கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் சேகரிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

Newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP