உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை- நினைவு தினம் இன்று

உலக தமிழாராட்சி மாநாட்டு படுகொலையின் 44வது நினைவு தினம் இன்று
 | 

உலக தமிழாராய்ச்சி  மாநாட்டு படுகொலை- நினைவு தினம் இன்று


உலக தமிழாராய்ச்சி  மாநாட்டில் படுகொலை நடந்து இன்றுடன் 44 ஆண்டு கடந்துள்ளது.  யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நினைவு இடத்தில் அரசியல் கட்சிகள்  மக்கள் என அனைவரும் அஞ்சலி  செலுத்தி வருகின்றனர்.

கடந்த 1974 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் தேதி முதல் 10ம் தேதி வரை, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக தமிழாராய்ச்சி  மாநாட்டில் இலங்கை போலீஸார் நடத்திய தாக்குதலில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தமிழர்கள் தமிழர்களாக வாழவே கூடாது, தமிழை ஆய்வு செய்ய அவர்களுக்கு உரிமையில்லை என்ற பேரினவாத சிங்தனையோடு, இந்த படுகொலையை அப்போது பதவியில் இருந்த சிறிமாவோ பண்டார நாயக்க திட்டமிட்டு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உலக தமிழாராய்ச்சி  மாநாட்டு படுகொலை நினைவிடத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆகியோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நடைபெற்று 44 ஆண்டுகள் கடந்துள்ள போதும், இது வரையில்  எவ்வித நீதியும் வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP