Logo

பெண்களும் மதுபான கடைகள் துவக்கலாம்: சரத் பொன்சேகா

மகிந்த ராஜபக்சே ஆட்சியின் போது 2000 பௌத்த கோவில்கள் மூடப்பட்டதுடன் 2000 மதுபான கடைகள் திறக்கப்பட்டது.
 | 

பெண்களும் மதுபான கடைகள் துவக்கலாம்: சரத் பொன்சேகா


ஆண்­க­ளுக்கு மதுபான கடைகள் திறக்க முடி­யு­மாயின் பெண்­க­ளுக்கும் மது­பான கடைகளை திறக்க முடியும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பெண்கள் மதுபானம் கொள்வனவு செய்யும் வகையில் அரசாங்கத்தினால் கடந்த 10ம் தேதி வெளியிடப்பட்ட அரச அறிவிப்பை ரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை திரும்பப்பெற அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 38 வருடங்களாக இலங்கையில் இருந்த சட்டத்தை மாற்றியே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சரத் பொன்­சேகா, "அர­சாங்கம் எடுத்த நட­வ­டிக்­கை­களில் தவ­றுகள் கிடை­யாது. முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­ப­க்சே ஆட்சியின் போது 2000 பௌத்த கோவில்கள் மூடப்­பட்­ட­துடன் 2000 மது­பான கடைகள் திறக்கப்பட்டது. இது குறித்து யாரும் பேச­வில்லை. பெண்­களும் மது­பா­ன­ கடைகள் திறக்க முடியும் என்ற தீர்­மா­னத்தில் எந்­த­ தவறும் கிடை­யாது. ஏனெனில் ஆண்­க­ளினால் மதுபானக்கடைகள் திறக்க முடி­யு­ம் என்றால் பெண்­க­ளாலும் அது முடியும்" என்றார்.

இலங்கையில், மதுபானக் கடைகள் மற்றும் மது உற்பத்தி நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதற்கும் பெண்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதற்கும் 1979ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP