ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் இலங்கையர் யார் தெரியுமா?

ரஜனிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் இலங்கையர் யார் தெரியுமா?
 | 

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் இலங்கையர் யார் தெரியுமா?


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மகனும் எம்.பியுமான நாமல் ராஜபக்சே, ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முதல் நபர் நாமல் என்பது குறிப்பிடத்தக்கது.


“அரசியலுக்கு வருவது உறுதி, தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போகின்றேன். சாதி, மதமற்ற ஆன்மீக வழியில் ஆட்சியை நடத்துவேன் என நடிகர் ரஜினிகாந்த்  அறிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்புக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தும், விமர்சனங்களை முன் வைத்தும் வருகின்றனர்.

இந்நிலையில், எம்.பி நாமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது தந்தை மஹிந்த ராஜபக்சேவுக்கு விருப்பமான நடிகர் ரஜினிகாந்த். அவர் அரசியலுக்கு வருகின்றார். இது ஒரு பெரிய, முக்கியமான செய்தி.ரஜினியின் அரசியல் வாழ்க்கை சினிமாவை போல் இருக்காது என நம்புகிறேன். (சிவாஜி படத்தில் வருவது போல) நல்லது செய்ததற்காக அவரை சிறையில் அடைப்பதை நான் பார்க்க விரும்பவில்லை. அரசியலுக்கு வரவேற்கின்றோம்” என பதிவிட்டுள்ளார்.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP