பெண்கள் மது வாங்கினால் என்ன தப்பு? வழக்கு தொடர்ந்தார் பிரபல நடிகை

அடிப்படை உரிமை மீறல்- இலங்கை ஜனாதிபதி மீது வழக்கு
 | 

பெண்கள் மது வாங்கினால் என்ன தப்பு? வழக்கு தொடர்ந்தார் பிரபல நடிகை


இலங்கையில் பெண்கள் மதுபானங்களை வாங்குவதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி உச்ச நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கையல் பெண்கள் மதுபானம் வாங்குவது விற்பது குறித்து நீண்ட காலமாக இருந்து வந்த தடை சமீபத்தில் விஷேச அரச அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டது. ஆனால் இந்த தடை நீக்கப்பட்டது குறித்து பல்வேறு தரப்பினரும் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்தனர். இலங்கை பௌத்த நாடு ஆகவே பெண்கள் மது வாங்குவது, விற்பனை செய்வதை அனுமதிக்க முடியாது என பௌத்த மதத்தினர் தெரிவித்தனர். இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, அரச அறிவித்தலுக்கு தடைவித்தார். அமைச்சரவையும் பெண்கள் மது வாக்குவதற்கான தடை நீக்க அறிவித்தலை திரும்பப் பெற்றது.

இந்நிலையில், பெண்கள் மதுபானங்களை வாங்குவதற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி பிரபல நடிகை சமனலி பொன்சேகா உள்ளிட்ட 7 பெண்கள், பெண்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாகக் கூறி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில், "பெண்கள் மதுபானம் வாங்குவது மற்றும் விற்பது குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீரர் முடிவு எடுக்க முடியாது. இந்த தடை உத்தரவு மூலம் பெண்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் மதுபானத்தை வாங்குவது மற்றும் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும். ஜனாதிபதியால் விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியான நீக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் 2014ம் ஆண்டின் அறிக்கைப்படி இலங்கையில் மது அருந்தும் பழக்கம் உள்ள பெண்களின் எண்ணிக்கை 20 சதவிகிதத்துக்கும் கீழ்தான் உள்ளது. கிட்டத்தட்ட 57 சதவிகித ஆண்கள் மது அருந்துகின்றனர். மது அருந்துகிறார்கள்... இல்லை... என்பது பிரச்னை இல்லை... பெண் என்ற ஒரே காரணத்துக்காக மது வாங்கக் கூடாது என்று கூறப்படுவதை எதிர்த்தே வழக்கு தொடர்ந்துள்ளதாக பெண்கள் கூறுகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP