"பயங்கரவாதத்தை அழிப்பது பற்றி எங்களுக்கு மட்டும் தான் தெரியும்"

பயங்கரவாதத்தை அழிப்பது எமக்கு மட்டும் தான் தெரியும்- பாகிஸ்தான் ராணுவ தளபதி
 | 

"பயங்கரவாதத்தை அழிப்பது பற்றி எங்களுக்கு மட்டும் தான் தெரியும்"


பயங்கரவாதத்தை எவ்வாறு அழிப்பது என்பது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் மட்டுமே தெரியும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவெத் பஜ்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஜெனரல் பஜ்வா, இலங்கை ராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு சென்று பார்வையிட்டார்.  ராணுவத்துக்கு வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து இருநாட்டு ராணுவத்தளபதிகளுக்கு இடையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இலங்கை ராணுவ பயிற்சிக் கல்லூரியின் தளபதி, பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு நினைவு பரிசு வழங்கினார். இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ராணுவம் வழங்கிய உதவிகளுக்கு இலங்கை ராணும் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் வெற்றி குறித்தும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. இருநாட்டின் பாதுகாப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி, "இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் மட்டுமே, எவ்வாறு பயங்கரவாதத்தை அழிப்பது என்பது தெரியும்" என்றார். மேலும் இலங்கை ராணுவத்தினரின் செயல்பாடுகளையும் பாராட்டினார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP