இலங்கை உள்ளிட்ட நாடுகளின் சலுகையை நிறுத்தியது அமெரிக்கா!

ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம், (ஜி.எஸ்.பி. வரிச்சலுகை ) 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் காலாவதியாகின்றது.
 | 

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் சலுகையை நிறுத்தியது அமெரிக்கா!


அமெரிக்காவிற்கு இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரும் ஆண்டு முதல் உடன் அமலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படவுள்ளது.

இலங்கை உட்பட சில நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு எற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.பி. என்ற வரிச்சலுகையை அமெரிக்கா வழங்கி வந்தது. இது இந்த மாதம் இறுதியுடன் காலாவதியாகின்றது. எனவே எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த வரி மீண்டும் விதிக்கப்படவுள்ளது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 

அமெரிக்காவானது இலங்கையின் முன்னணி ஏற்றுமதி சந்தையாக இருப்பதில் பெருமை கொள்கின்றது. பூகோள வர்த்தக வரைபுகளின் 2016 அறிக்கைப்படி, அமெரிக்கா 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளது. 

2018ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.பி.யின் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை. இதன் விளைவாக ஜி.எஸ்.பி. வரிச் சலுகை இந்த ஆண்டுடன் காலாவதி ஆகின்றது. இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு எற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் உடன் அமலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்படவுள்ளது, என கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP