ஆட்கடத்தலை தடுக்க இலங்கைக்கு அமெரிக்கா 18.36 கோடி நிதி உதவி

ஆட்கடத்தலை தடுக்க இலங்கைக்கு அமெரிக்கா 18.36 கோடி நிதி உதவி
 | 

ஆட்கடத்தலை தடுக்க இலங்கைக்கு அமெரிக்கா 18.36 கோடி நிதி உதவி


ஆட்கடத்தலை தடுப்பதற்கு அமெரிக்கா 18.36 கோடி நிதியை இலங்கைக்கு வழங்கவுள்ளது என அமெரிகக் தூதுவர் அதுல் கெசப் தெரிவித்துள்ளார். இலங்கையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது.

இலங்கையில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக அங்குள்ள தமிழர்கள் கடல் மற்றும் சட்டவிரோத விமானப்பயணங்கள் மூலம் வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். மேலும் வெளிநாடுகளுக்கு சட்டவிதோரமாக ஆட்கடத்தல்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சுமத்தப்படுகின்றது. இதில் பெருமளவு இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இது குறித்து இலங்கைக்கான அமெரிகக் தூதுவர் அதுல் கெசப் தெரிவிக்கையில்,“நவீன அடிமைத்தனத்தின் அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கும் ஆட்கடத்தல் குறித்து சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படவும் உதவிகள் வழங்கப்படுகின்றது. இதில் இலங்கை அரசாங்கத்துக்கும் உதவிகள் வழங்கப்பட உள்ளது. ஆட்கடத்தல் விவகாரத்தில் இலங்கைக்கு தொடர்ந்து அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP