இலங்கைக்கு ஐ.நா சபை பாராட்டு!

இலங்கைக்கு ஐ.நா சபை பாராட்டு!
 | 

இலங்கைக்கு ஐ.நா சபை பாராட்டு!


இலங்கையில் சிறுவர்கள் மீதான வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை எடுத்து வரும் முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவிலான சிறுவர்கள் வறுமை, போர் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டனர். இவ்வாறான சிறுவர்கள் சமூகவிரோத கும்பல்களால் பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்ற துன்பங்களை அனுபவித்து வந்தனர். இதனால் இலங்கையில் உள்ள சிறுவர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது.

இதையடுத்து இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, தனிமையில் உள்ள சிறுவர்களை சிறுவர் இல்லங்களில் இணைத்தல் போன்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளதோடு, அவர்களின் கல்வி செயல்பாடுகளுக்கும் உதவி வருகின்றது.

இந்நிலையில், சமீபத்தில், ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகள் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை சிறுவர் மீதான வன்முறைகளைத் தடுக்க எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டினர்.

தெருவில் வாழும் பிள்ளைகளுக்கான பிரத்தியேக வேலைத்திட்டங்கள், சிறுவர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக குடும்பக்கட்டமைப்பை உறுதிமிக்கதாக மாற்றுதல், விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் போன்றவை குறித்து இந்த சபை தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP