பறக்கும் பட்டத்தில் பயணிக்கும் மனிதர்கள்! பிரமிக்க வைக்கும் வல்வெட்டித்துறை

பறக்கும் பட்டத்தில் பயணிக்கும் மனிதர்கள்! பிரமிக்க வைக்கும் வல்வெட்டித்துறை
 | 

பறக்கும் பட்டத்தில் பயணிக்கும் மனிதர்கள்! பிரமிக்க வைக்கும் வல்வெட்டித்துறை


இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வல்வெட்டித்துறை கடற்கரையில் பட்டம் ஏற்றும் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் நூற்றுக்கணக்காணவர்கள் கலந்துகொண்டனர்.


வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம் ”பட்டப் போட்டித் திருவிழா 2018” என்ற பெயரில் இந்த திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தது. 


போட்டியில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட 68 வகையான பட்டங்கள் பறக்க விடப்பட்டன. வானத்தில் பட்டங்கள் காட்டிய வர்ணஜாலங்கள் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.


பட்டப் போட்டி திருவிழாவில் வெற்றிபெற்ற பட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் படி போட்டியில் இடம்பெற்ற 68 பட்டங்களில் 1ம் இடத்தினை பறக்கும் மேடையில் பொம்மலாட்டம் பட்டம் பெற்றுள்ளது. 2ம் இடத்தினை அன்னப்படகு பட்டம் பெற்றுள்ளது. 3ம் இடத்தினை உருமாறும் ட்ரான்ஸ்பார்மர் பெற்றுள்ளது. இப்பட்டத்தை ஏற்றிய போட்டியாளர்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர். கற்பனைக்கும் எட்டாத வகையில் போட்டியாளர்கள் பட்டங்களை தயாரித்து பறக்க விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP